அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சீனாவிற்கு 100 சதவீதம் வரியை அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 12-ஆம் திகதி, பிட்காயின் (Bitcoin) மற்றும் எத்திரியம் (Etherium) உள்ளிட்ட முக்கிய டோக்கன்கள் இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளன.
முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளாக தங்கம் மற்றும் வெள்ளியைத் தேடிச் சென்றுள்ளனர்.
சந்தை நிலவரம்
கிரிப்டோ சந்தையின் மொத்த மதிப்பு 4 ட்ரில்லியன் டொலரில் இருந்து 3.7 ட்ரில்லியன் டொலராக குறைந்துள்ளது.
பிட்காயின் விலை 111,660 டொலர், ஏத்திரியம் 3,817 டொலர், Binance Coin 1,140 டொலர் மற்றும் XRP 2.37 டொலர் என பதிவாகியுள்ளது.
சரிவுக்கான காரணங்கள்
ட்ரம்ப் சீனாவிற்கு எதிராக அறிவித்த வரிவிதிப்புகள் மற்றும் அமெரிக்க மென்பொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.
சீனாவின் பதிலடி நடவடிக்கைகள் குறித்த அச்சம்.
அக்டோபர் 11-ஆம் திகதி மட்டும் 19 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோ டோக்கன்கள் liquidate செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் நிலை
Open interest 18 சதவீதம் குறைந்துள்ளது, இது முதலீட்டாளர்கள் அபாயகரமான நிலைகளிலிருந்து வெளியேறுவதை காட்டுகிறது.
பிட்காயின் 110,000 ஆதரவு நிலையை தக்கவைத்துக்கொள்ளுமா என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமை, 2025 முதல் காலாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய கிரிப்டோ வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.








































